நீடாமங்கலத்தில் வளர்ச்சி பணிகள் ஊராட்சி துறை இயக்குநர் ஆய்வு

 

நீடாமங்கலம், அக். 22: நீடாமங்கலம் ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோயில்வெண்ணியில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா வந்திருந்தார். மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இளஞ்சேரன், ஒன்றியகுழு தலைவர் செந்தமிழ்ச் செல்வன், மன்னார்குடி கோட்ட உதவி செயற் பொறியாளர் ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, முத்துக்குமரன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலகம், கலைஞர் கனவு இல்லப் பணிகள், ரிசியூர் ஊராட்சி வரதராஜ பெருமாள் கட்டளை கார்ச்சாங்குடி இணைப்பு கோரையாற்றின் குறுக்கே நபார்டு உதவியுடன் ரூ.342.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டையடியில் கலைஞர் கனவு இல்ல பணிகள், ரிசியூரில் ஜெஎம் திட்டத்தில் 23.75 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணி, அதங்குடி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லப் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். அருகில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் இருந்தனர்.

The post நீடாமங்கலத்தில் வளர்ச்சி பணிகள் ஊராட்சி துறை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: