×
Saravana Stores

21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, பட்டிப்புலம் ஊராட்சியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் அருகே, பட்டிப்புலம் ஊராட்சியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சியில் 2300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு தெருக்களில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் அமைக்கப்பட்டது.

அந்த, சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்படும் தெருக்களில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பட்டிப்புலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, உள்ளூர் திட்ட குழுமம் மூலம் 16 தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.1 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, 2ம் கட்டமாக ஊராட்சிக்குட்பட்ட இளந்தோப்பு பகுதி ஆஞ்சநேயர் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சாலை பணியால் மக்கள் நிம்மதியடைந்து, சாலை பணியை மேற்கொள்ளும் பட்டிப்புலம் ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஒப்பந்ததாரருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Pattipulam panchayat ,Mamallapuram… ,
× RELATED மாமல்லபுரத்தில் பார்க்கிங் ஊழியர்...