பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு சப் – இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருப்பந்தியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 1,390 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், திருப்பந்தியூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பவன்குமார் (35) என்பதும், பெட்டி கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: