தீவிரவாத தாக்குதலில் மருத்துவர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்: ராகுல் காந்தி

டெல்லி: தீவிரவாத தாக்குதலில் மருத்துவர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திற்கு உட்பட்ட ககாங்கிர் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை உள்கட்டபணிகளை கொண்டு வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் தற்கால குடிசை அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மருத்துவர் மற்றும் 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்ததுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி; ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பாலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது மிகவும் கோழைத்தனமான மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

பயங்கரவாதிகளின் இந்த அடாவடித்தனத்தால் ஜம்மு காஷ்மீரின் கட்டமைப்பின் வேலைகளையும், மக்களின் நம்பிக்கையையும் ஒருபோதும் உடைக்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தீவிரவாத தாக்குதலில் மருத்துவர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: