சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் மிரட்டல் காரணமாக பயணிகள் அச்சம்

சென்னை: சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 19-ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் 41 விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் இடையே பதற்றத்தையும், பாதுகாப்பற்ற மனநிலையையும் ஏற்படுத்தியுள்ளன. மிரட்டல்கள் பெரும்பாலானவை சமூக வலைதளங்கள், மின்னஞ்சல் வழியே விடுக்கப்பட்டவை.

அவை புரளி என கண்டறியப்பட்டாலும், அட்டவணை மாற்றம், திருப்பிவிடப்படுவது,விமான ரத்து என விமான சேவை சிரமத்துக்குள்ளாகிறது. சில நேரங்களில் மிரட்டல் விடுபவர்கள் அந்த விமானத்தில்
செல்லவிருந்த பயணிகளாகவும் இருக்கின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் 17 வயது சிறுவன் பிடிபட்ட நிலையில், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

விமானங்கள் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில், நேற்று டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே குண்டு விடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் மிரட்டல் காரணமாக பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: