×
Saravana Stores

யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்

சென்னை: மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது மனைவிக்கு தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார். மருத்துவ விதிகளின்படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புகார் அடிப்படையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

The post யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Irrfan ,Chennai ,Irfan ,
× RELATED ஆர்.எஸ்.பாரதி மீது யூடியூபர் சங்கர்...