தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் உடுமலை மாவட்டத்தில் அதிகஅளவில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணை தனது முழு கொள்ளளவை நெறுங்கி வருகிறது. இதனால் எந்த நேரமும் அமராவதி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை அதிகமாக பெய்து வருவதால், திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கோவில் நிர்வாகம் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பஞ்சலிங்க அருவிகளுக்கு செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர். தொடர்ந்து பொதுபணித்துறையினர், வனத்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18094 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தொடர் கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: