கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்: கொத்து கொத்தாக கரை ஒதுங்கியதால் பரபரப்பு

கோழிக்கோடு: கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் அரங்கேறும் இதனை கேரள மக்கள் மத்தி சாகரா என்று அழைப்பர். லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கடல் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் இத்தகைய காட்சி தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோங்காடு கடற்கரை பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது.

லட்சக்கணக்கான மீன்கள் கடல் அலையில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய நிலையில், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்களை உயிரோடு எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள அரபிக்கடல் பகுதிகளில் கிடைக்கும் மத்தி மீன்களுக்கு தனி பெரும்பான்மை உள்ளது. இந்த மீன்களுக்கு சமீபகாலமாக விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இத்தகைய கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கிடைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

The post கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்: கொத்து கொத்தாக கரை ஒதுங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: