தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் மிதமான மழையும், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருமவழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக மாறும் என வானிலை மையம் கூறியுள்ளது. புயலாக மாறும் பட்சத்தில் ஏற்கனவே புயல் பட்டியலில் உள்ள பெயர்களின் வரிசைப் படி ‘டானா’ என்று பெயரிடப்படும்.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

The post தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: