ஜார்க்கண்டில் ஆர்ஜேடி தனித்து போட்டி?

ராஞ்சி: ஜார்க்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதி உள்ள 11 இடங்கள் ஆர்ஜேடி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என ஜேஎம்எம், காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்தன. இந்த நிலையில் ஆர்ஜேடியின் செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜா நேற்று கூறுகையில்,‘‘ எங்களுக்கு 13 தொகுதிகளுக்கு குறையாமல் வேண்டும். 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட சொன்னால் ஏற்க மாட்டோம். பாஜவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்.தனித்து நின்றாலும், கூட்டணியை பாதிக்காத வகையில், 62 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவோம்’’ என்றார்.

The post ஜார்க்கண்டில் ஆர்ஜேடி தனித்து போட்டி? appeared first on Dinakaran.

Related Stories: