நல்லாற்று நீரோடையில் துர்வாரும் பணிகள் தீவிரம்

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகே சீனிவாசபுரம் முதல் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் வழியாக நல்லாற்று நீரோடை செல்கிறது. இதில், விஷ செடிகள், களைச்செடிகள், புற்கள், புதர்கள் மற்றும் அவ்வப்போது, பெய்து வரும் மழையால் அடித்து வரும் கழிவுகள் ஆகியன நல்லாற்று நீர்வழிப் பாதையில் குவிந்து கிடக்கிறது. இதனை பல மாதங்களாக தூர்வாராமல் இருந்து வந்தது. இதனால் கழிவுநீர், மழைநீர் செல்ல இயலாமல் அடைக்கப்பட்டிருந்தன.

அவிநாசியில் மழை நீர் வடிகால் மற்றும் நீர் வழிப்பாதைகளை கண்காணித்து சுத்தப்படுத்துதல் மற்றும் துர்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டனர்.
சீனிவாசபுரம் முதல் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பின்புறத்தின் வழியாக செல்லும் நல்லாற்று நீரோடையில் இரண்டு கி.மீ., தூரம் வரை பொக்லைன் இயந்திரம் மூலம் துர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.

 

The post நல்லாற்று நீரோடையில் துர்வாரும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: