×
Saravana Stores

ஹைதி மீது ஆயுத தடை மேலும் கடுமையானது: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்

ஐநா: கரீபியன் தீவு நாடான ஹைதி அதிபராக இருந்த ஜொவனேல் மோய்ஸ் 2021ல் படுகொலை செய்யப்பட்ட பிறகு கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. சமீபத்தில் தலைநருக்கு அருகே உள்ள பொன்ட் சோண்டே நகரில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் 115 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஹைதி மீதான ஆயுத தடையை மேலும் கடுமையாக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அனைத்து வகையான ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கும் தடை விதிக்கும் தீர்மானத்தை 193 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் எந்த ஆயுதமும் வன்முறை கும்பலிடம் சேராமல் தடுக்க முடியும் என ஐநா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

The post ஹைதி மீது ஆயுத தடை மேலும் கடுமையானது: ஐநா தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Haiti ,UN ,President ,Jovanel Moise ,Caribbean island ,Pont Sonde ,Thalinaru ,
× RELATED உலக நாடுகளின் வறுமை பட்டியலில்...