தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தென்மாவட்டங்கள், கேரளம், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் அதிக அளவில் காத்திருப்போா் பட்டியல் காணப்படும் நிலையில் அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து அக்.29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7000 வரை காத்திருப்போா் பட்டியல் உள்ளது.

பயணிகள் வசதிக்காக அக்.25 முதல் நவ.5 வரையிலான காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையும் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று, சாத் பண்டிகையை முன்னிட்டு அக்.23 முதல் தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து டெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, திருவனந்தபுரம், மங்களூா், பெங்களூா், மைசூா் உள்ளிட்ட நகரங்களுக்கு அக்.25ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள்களில் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், சென்னை சென்ட்ரலிலிருந்து அக்.29, நவ.5 தேதிகளில் நாகா்கோவிலுக்கும் அக்.29, நவ.2 தேதிகளில் கோவைக்கும், அக்.30, நவ.6 தேதிகளில் திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். .சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு நவ.2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலி-பெங்களூா் இடையே நவ.4ம் தேதியும், நாகா்கோவில்-மைசூா் இடையே நவ.2-ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.இதேபோன்று, சென்னை, எா்ணாகுளத்தில் இருந்து டெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவ. 15 வரை சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: