×

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

ராசிபுரம், அக்.19: பாவை கல்வி நிறுவனங்களில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், ‘அப்துல் கலாம் இளைஞர்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே, அவரது கனவினை நனவாக்கும் வகையில், உயர்ந்த இலக்குகளை கொண்டவர்களாக செயல்படுங்கள். உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற தேவையான அறிவுத் தேடலை விரிவுபடுத்தி, அறிவில் சான்றோர்களாக செயல்பட்டும், உங்கள் இலக்குகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,’ என்றார். தொடர்ந்து அப்துல்கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அப்துல்கலாமின் போதனைகளை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ராமசாமி, அனைத்து கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அப்துல் கலாம் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Abdul Kalam ,Rasipuram ,President of the Republic ,Abdulkalam ,Bhavi ,Mangai Natarajan ,Speaker of Education Institutions ,Bhavai educational institutions ,Nadarajan ,Abdul ,Celebration ,
× RELATED 7 வயதில் துவங்கிய பயணம்…18 வயதில்...