×

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரியமுஸ்லிம் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் மூன்று வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட முஸ்லிம் ஆண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (9566239685, 6379179200) (044-22505886/044-22502267). ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் சுயவிவர விண்ணப்பத்தை வருகிற 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்படடுள்ளது.

 

The post சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரியமுஸ்லிம் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabian Ministry ,Tamil Nadu Govt Information ,CHENNAI ,Tamil Nadu Government Foreign Employment Agency ,Ministry of Saudi Arabia ,Saudi Arabian ,Tamil Nadu government ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!