×

இந்தி மாத கொண்டாட்டத்தை நிறுத்தக்கோரி திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்தி மாதம் கொண்டாட்டத்தை நிறுத்த வலியுறுத்தி, சென்னையில் நேற்று திமுக மாணவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு நடத்தப்பட உள்ள இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை தொலைக்காட்சி வளாகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமை தாங்கினார். மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ் காந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவர் அணியை சார்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எழிலரசன் பேட்டியளிக்கையில், ‘‘,இந்தியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.. பன்முகத்தன்மையை சிதைப்பது. எனவே தான் இந்த போராட்டம்’’ என்றார்.

The post இந்தி மாத கொண்டாட்டத்தை நிறுத்தக்கோரி திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Hindi ,CHENNAI ,Golden Jubilee of Chennai ,Television ,
× RELATED திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன்