×

தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி மாணவன் பலி

திருவொற்றியூர், அக். 19: திருவொற்றியூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(15), திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் லோகேஷ் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ரயில்வே கேட் வழியாக சென்றால் நேரமாகும் என்பதால், பள்ளிக்கு பின்புறம் உள்ள தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் லோகேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் படுகாயமடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து வந்துல மாணவன் லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Murugan ,Tiruvottiyur Kalaivanar ,Lokesh ,Thiruvotiyur Jayagopal Karodia Government Higher Secondary School ,
× RELATED எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி...