சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கதீட்ரல் சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு மழையின் காரணமாக கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி (நேற்று) வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை (இன்று) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கான நுழைவுச்சீட்டு https://tnhorticulture.in/kcpetickets இணையதளம் வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும். மேலும், இசை நீரூற்றுக்கு ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதால் மாலை 4 மணி முதல் இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாலை 6 மணி வரை பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: