தமிழ்த் தாய் வாழ்த்தில் விடுபட்ட திராவிடநல் திருநாடு: பல்வேறு தரப்பினர் கண்டனம்

சென்னை: சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ரவியும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்தில் அவமதிப்பு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிடநல் திருநாடு என்ற வாசகம் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தி இருப்பதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்; திராவிடநல் திருநாடு என்ற வாசகத்தை தவிர்த்துவிட்டு பாடியது மிகப்பெரிய பித்தலாட்டம். தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தியிருக்கிறார். திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழர் விரோதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். எந்த மொழிக்கும் திமுக எதிரியல்ல; இந்தியை திணிக்க நினைப்பதை திமுக எதிர்க்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை நசுக்க நினைத்தால் எல்லா விழாக்களிலும் பாடப்படும் நிலை உருவாகும். தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் இழிவுபடுத்தி இருக்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post தமிழ்த் தாய் வாழ்த்தில் விடுபட்ட திராவிடநல் திருநாடு: பல்வேறு தரப்பினர் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: