இந்தியாவில் நேரடி வரிவசூல்: 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24ல் 182% அதிகரிப்பு!!

டெல்லி: இந்தியாவின் நேரடி வரிவசூல் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த நிதியாண்டில் 182% அதிகரித்து உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்பு 2023-24ம் நிதியாண்டில் 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகளவு என வருமான வரித்துறை கூறியுள்ளது.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் இரு மடங்காக உயர்ந்து 9 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், தனிநபர் வருமான வரிவசூல் நான்கு மடங்கு உயர்ந்து 10.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-15ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரிவசூல் 6.96 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் 4.29 லட்சம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வரிவசூல் 2.66 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15 நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 8கோடியே 61லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 2014-15ம் நிதியாண்டில் 5.70 கோடியாக இருந்த வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 10.41 கோடியாக உயர்ந்து இருந்தாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

The post இந்தியாவில் நேரடி வரிவசூல்: 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-24ல் 182% அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: