திருவள்ளூர்: ஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக பெரியபாளையம் அருகே தரைப்பாலம் மூழ்கியது. காரணி, புதுப்பாளையம் கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.