செல்லூர் திருவாப்புடையார் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்: ஐகோர்ட் கிளையில் தகவல்

 

மதுரை, அக். 18: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள திருவாப்புடையார் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக, ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை, செல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருவாப்புடையார் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலமாகும். இக்கோயிலின் தெற்குபகுதியில் அமைந்துள்ள தெப்பக்குள தீர்த்தத்தை கொண்டுதான் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

தற்போது அந்த தெப்பக்குளம் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது.எனவே, தெப்பக்குளத்தினை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் அப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ.13க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post செல்லூர் திருவாப்புடையார் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் துவக்கம்: ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: