×

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், அக். 18: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று 18ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், கணக்காளர், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையலாம். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும், கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur District ,Employment and ,Vocational ,Guidance Central Office Campus ,Sector ,Employment Camp ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!