தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டி நடத்த திட்டம்: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்திடதிட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலைப் பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம் ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும்.

மது போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினர் இடையே சிந்திக்கும் திறன்களை குறைத்து. சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திட காரணமாக அமைந்திடும்.எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம் “போதையில்லா தமிழ்நாடு” என்கிற தலைப்பில் ரீல்’ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் ஆகிய போட்டிகள் நடத்திட முன்வந்துள்ளது.

இப்போட்டிகளில், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில் உருவான படைப்புகளை நவம்பர்-15 தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டிகளில் கலந்துக்கொள்பவர்கள் அனுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை சார்பில் போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டி நடத்த திட்டம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: