×

நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள், விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சள் ஏலத்தில், கலந்து கொள்ள சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பனங்காலி, உருண்டை, விராலி உள்ளிட்ட ரகங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும் மஞ்சளை ஆத்தூர், சேலம், நாமக்கல், ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகை புரிந்து ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை வாங்கி செல்கின்றனர். சராசரியாக வாரம் தோறும் நடைபெறும் மஞ்சள் ஏலத்தில் ₹10 லட்சம் முதல் ₹2 கோடி வரை மஞ்சள் வியாபாரம் நடைபெறும். தற்போது நாமகிரிப்பேட்டையில், தொடர் மழையின் காரணமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்படுகிறது என நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் போது மஞ்சள் ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakrippet Agricultural Producers and Sales Association ,Panangali ,Urundai ,Dinakaran ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பயங்கர விபத்து...