×

நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், அக்.17: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

The post நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Employment and Vocational Guidance ,Centre ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்