மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் கனமழை முன்னெச்செரிக்கை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மழை பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பட்டாளம் பகுதியில் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

சில இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது; மழை குறைந்ததால் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்துள்ளோம். பட்டாளம் பகுதியில் 3 உணவு சமையல் கூடத்தில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேங்கிய மழை நீர் துரிதமாக அகற்றப்படுகிறது. பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் கால்வாய்கள் சீராக உள்ளதால் மழை நீர் வேகமாக வெளியேறுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் சமையல் அறை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. மழை நின்றவுடன் 4-5 மணி நேரத்தில் தண்ணீர் முற்றிலும் வெளியேறி விடுகிறது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி ஸ்ரீவட்சன் சாலை பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்துள்ளது.

The post மழைக்கால மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: