சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அலுவலர்களை சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அருகிலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டத்திற்குப்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள காலங்களில் நீர்பெருக்கு அதிகரிக்கும்போது பாம்பு மற்றும் இதர வன உயிரினங்கள் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது.

இத்தகைய இனங்களில் வனத்துறை வாயிலாக உடன் நடவடிக்கை எடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அலுவலர்களை சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய இனங்களில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வெள்ளத் தடுப்பு கட்டுப்பாட்டு அறை இலவச உதவி எண் 1903-க்கும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெவித்துக் கொள்ளப்படுகிறது.

The post சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அலுவலர்களை சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: