அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல்


சென்னை: அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சென்னையில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஆதிநாராயணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கத்திகள், 4 இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் பசும்பொன் தேவர் மண்டபத்தில் அகமுடையார் அமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் கலந்து ெகாண்டு பிரச்னை ஏற்படுத்த மதுரையை சேர்ந்த பிரபல ஏ பிளஸ் ரவுடியான ஆதிநாராயணன் (52) முயற்சி செய்ய இருப்பதாக உளவுத்துறை மூலம் பாண்டி பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் பாண்டிபஜார் மற்றும் தேனாம்பேட்டை போலீசார் ரவுடி ஆதிநாராயணன் இருக்கும் பகுதியை செல்போன் சிக்னல் உதவியுடன் தேடினர்.

அப்போது ஆவடி அருகே காந்திநகர் பகுதியில் கூட்டாளிகளுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் நேற்று அதிரடியாக ஆதிநாராயணனை கைது செய்தனர். அவரது காரை சோதனை செய்த போது, அதில் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் வகையில் பதுக்கி வைத்திருந்த 2 பட்டாகத்திகள், 4 இரும்பு ராடுகள் இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையை சேர்ந்த ஆதிநாராயணன் காவல்துறையின் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியாக உள்ளார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை, திருமங்கலம், காரைக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடி ஆதிநாராயணனை போலீசார் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ரவுடி ஆதிநாராயணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அகமுடையார் ஆலோசனை கூட்டத்தை சீர்குலைக்கும் விதமாக சென்னையில் ஆயுதங்களுடன் பதுங்கிய மதுரை ரவுடி ஆதிநாராயணன் கைது: காரில் இருந்து கத்திகள், இரும்பு ராடுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: