×

இந்திய கணசங்க கட்சியின் 9ம் ஆண்டு துவக்க விழா

நாமக்கல், அக்.15: நாமக்கல்லில், இந்திய கணசங்க கட்சியின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா, பெரியார் பிறந்த நாள் விழா ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் சாக்கிய பெருமாள்ராஜ் தலைமை வகித்தார். கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் முத்துசாமி விருது வழங்கி பேசினார். துணைத் தலைவர்கள் செபாஸ்டின், வீரா திருமலை, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர் ரமேஸ், திக மாவட்ட செயலாளர் பெரியசாமி, இந்திய கனசங்கம் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு தலைவர் குரு விஜயன், தீர்மான வரைவுக்குழு தலைவர் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை நிலைய செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

The post இந்திய கணசங்க கட்சியின் 9ம் ஆண்டு துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : 9th Annual Inaugural Ceremony ,Indian Ganasanga Party ,Namakkal ,9th Annual Inaugural Ceremony and Award Ceremony ,Periyar ,Celebration ,President ,Sakya Perumalraj ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்