×

கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் : அறிக்கையில் தகவல்

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியானது. கொடைக்கானல் அருகே மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து தண்ணீர் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் அண்மையில் வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலம் பிளவுபட்டு இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வனப்பகுதியில் நிலம் பிளவுபட்டு இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பாக கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,”கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம். நிலப்பிளவு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

The post கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் : அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Koonipatti ,Dindigul ,Kodaikanal ,Cheruppan ,Klavari village ,Melmalai ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவு: முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு