குறிச்சி,சுந்தராபுரம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

 

மதுக்கரை,அக்.10: கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று மாலை குறிச்சி,போத்தனுர்,மேட்டூர்,சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவை,பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி,காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி தத்தளித்தபடி சென்றனர். மழைநீர் குளம் போல தேங்கி நின்றதால்,அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் என்று சொல்லி வரும் நிலையில், குறிச்சி,காந்தி நகர் போன்ற மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து, மழை நீர் தடையின்றி வடிந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post குறிச்சி,சுந்தராபுரம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: