காருக்குள் பெண்ணிடம் அத்துமீறல் கர்நாடக காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வார் கிராமப்புற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது, சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், ‘கடந்த 2022ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்ட போது வினய் குல்கர்னியின் அறிமுகம் கிடைத்தது. என்னை தேவனஹள்ளி மற்றும் தர்மஸ்தலாவுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்து எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிரட்டினார். மற்றொரு சம்பவத்தின் போது, என்னை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட புகாரின் அடிப்படையில், சஞ்சய் நகர் போலீசார் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அதேபோல் வினய் குல்கர்னியின் உதவியாளர் அர்ஜூன் மீதும் பெண்ணை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வினய் குல்கர்னிக்கும் அந்தப் பெண்ணும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக எம்எல்ஏ தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் டிவியின் தலைவர் ராகேஷ் ஷெட்டி மற்றும் அந்த பெண் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எம்எல்ஏ மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காருக்குள் பெண்ணிடம் அத்துமீறல் கர்நாடக காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: