ஜம்மு-காஷ்மீரில் காங். கூட்டணி வெற்றி முதல்வர் வாழ்த்து

சென்னை: ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இது இந்தியா மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ. அரசு ஜம்மு-காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் தகுதியும் மாண்பும் மீட்டளிக்கப்பட வேண்டும் என்ற அம்மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பும் ஆகும். நீதி, ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கிற – அனைவரையும் அரவணைக்கிற எதிர்காலம் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கான தொடக்கத்தை இத்தருணம் குறிக்கிறது. இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜம்மு-காஷ்மீரில் காங். கூட்டணி வெற்றி முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: