×

செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2024ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம்(7ம் தேதி) முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று வௌியானது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜெப்ரி ஹிண்டன் ஆகியோரது பெயர்கள் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளன. தங்க பதக்கத்துடன் கூடிய ரூ.8.39 கோடி பரிசு தொகையை உள்ளடக்கிய நோபல் விருதுகள் விருதை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

The post செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Stockholm ,United States ,United Kingdom ,Alfred Nobel ,Sweden ,
× RELATED இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு