×

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது. இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோயில் வளாக பந்தலுக்குள் தீ பிடித்து கரும்புகை வந்தது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகின. தீ விபத்து நடந்த இடத்தில் மின்சாதன பொருட்களோ, எலக்ட்ரிக் வாகனங்களோ எதுவும் இல்லை. இதனால், மர்மநபர்கள் யாரேனும் நள்ளிரவில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றனரா? என்ற கோணத்தில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

The post ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Erode temple ,Erode ,Mariamman Temple ,Chinna Sadayampalayam ,Erode Corporation ,Mandal Puja ,Kuppusamy ,
× RELATED கொள்ளிடம் அருகே சந்தப்படுகை சாந்த...