கம்பம் பள்ளத்தாக்கில் சீராக உள்ள செவ்வாழை விலை

*விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூர் : செவ்வாழை விலை கடந்த சில மாதங்களாக சீராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தோட்ட விவசாயத்தில் வாழை பயிரிடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் வாழைக்கு உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உள்ளது. தற்போது கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் செவ்வாழை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழைக்கன்று நடப்பட்டு 12 மாதங்கள் ஆன நிலையில் செவ்வாழைத்தார் ஒன்று 10 முதல் 15 கிலோ வரை எடை கிடைக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக ரூ.65 முதல் ரூ.80 வரை சென்ற செவ்வாழை விலை, தோட்ட விலைக்கு தற்போது ரூ.65க்கு வெட்டப்படுகிறது. இதர வாழை ரகங்களை காட்டிலும் செவ்வாழைக்கு கடந்த மூன்று மாதங்களாக சீரான விலை கிடைப்பதால் செவ்வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கே விளையும் செவ்வாழை அண்டை மாநிலமான கேரளா, தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை சென்னை ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஐம்பது ரூபாய்க்கு மேல் விற்றால் ஓரளவு லாபம் கிடைக்கும் என்ற நிலையில் தற்போது ரூ.65க்கு மேல் விலை கிடைத்து வருவதால் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

The post கம்பம் பள்ளத்தாக்கில் சீராக உள்ள செவ்வாழை விலை appeared first on Dinakaran.

Related Stories: