ஆர்எம்கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடக்கம்

சென்னை: கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கப்பட்டு, வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளியில் 4 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 9 மண்டலங்களில் இருந்து 30 பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கால்பந்து போட்டியின் தொடக்க விழாவிற்கு ஆர்.எம்.கே கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். இயக்குனர் ஆர.ஜோதி நாயுடு செயலாளர் எலமஞ்சி பிரதீப், துணை தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், நிர்வாக அறங்காவலர் சவுமியா கிஷோர், ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, டி.பிச்சாண்டி, வி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் முதல்வர் சங்க்லா சப்னா அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஷாலினி ஜெயராமன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் அணிகளின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் மிக முக்கியமானது. விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இது போன்ற வாய்ப்புகள் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்க வேண்டும் என பேசினார்.
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சென்னை மண்டல அலுவலர் தினேஷ் ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

 

The post ஆர்எம்கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: