போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

சென்னை: போலியான இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சைபர் குற்றவாளிகள், வணிக நிறுவனங்களின் வியாபாரம் தொடர்பான பணப்பரிமாற்ற மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை கண்காணித்து, அதனை இடைமறித்து, அந்த தகவல்களை கொண்டு மோசடியாக வணிக நிறுவனங்களிடமிருந்து பணம் பறித்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் மேலாளருக்கு அவர் வணிகம் செய்து வரும் தெரிந்த நபரின் மின்னஞ்சல் போல உள்ள ஒரு போலியான மின்னஞ்சல் முகவரியிலிருந்து நம்ப தகுந்த வகையில் அந்த கம்பெனி கோரிய பொருட்களுக்கான அடக்கவிலை பட்டியலுடன் மற்றும் செலுத்தவேண்டிய குறிப்பிட்ட தொகை, அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் போலியான மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர்.

அந்த மின்னஞ்சல் முன்னதாக பெறப்பட்ட மின்னஞ்சல்களுடன் தொடர்புடையதாக இருந்ததால், வணிக மேலாளர் உடனடியாக அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு மூலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் பணம் கிடைத்துவிட்டதா என பொருள் அனுப்பும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த மின்னஞ்சல் மோசடி பற்றி தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மோசடி செய்யப்பட்ட தொகையை கண்டறிய சென்னையில் உள்ள அந்த வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பணம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதா என விசாரிக்கப்பட்டது.

உடனடியாக, சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் க்ரைம் தனிப்படை குழு, தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழு தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: இந்த வழக்கு மின்னஞ்சலின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக அதிகப்படியான நிதி பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது இந்த வகையான மோசடிகள் இணைய குற்றவாளிகளால் நிகழ்த்தப்படுகிறது. இதில் கவனக்குறைவாக இருந்தால் அது வணிகர்களுக்கு அதிக நிதி இழப்புகளை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

 

The post போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: