×

தொண்டி அருகே ஜெட்டி பாலத்தில் மெகா ஓட்டை : சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை

Thondi, Fisherman Birdgeதொண்டி : தொண்டி அருகே உள்ள சோழியக்குடி கடல் பகுதியில் சேதமடைந்துள்ள ஜெட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அருகே உள்ள சோழியக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஆயித்திற்க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இக்கடலில் சிறிய ஜெட்டி பாலம் மீனவர்கள் நலன் கருதி கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம்தான் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருள்களை படகுகளில் ஏற்றுவதும் மீன் பிடித்து திரும்பி வந்து மீன் உள்ளிட்ட பொருள்களை இறக்குவதும் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாலத்தின் நடுவில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இது மீனவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறியது, இந்த பாலம் படகுகளை கடல் பகுதியில் நிறுத்தி சரக்குகளை ஏற்ற இறக்க வசதியாக உள்ளது. இல்லையென்றால் தலைசுமையாக தூக்கி செல்ல வேண்டும். தற்போது பாலத்தின் நடுவில் பெரிய ஒட்டை விழுந்துள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி தவறி விழுந்து விடுகின்றனர்.
அதனால் தற்போது பலகை கொண்டு அடைத்துள்ளோம். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post தொண்டி அருகே ஜெட்டி பாலத்தில் மெகா ஓட்டை : சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tondi ,Sozoikudi Sea ,Sozhiyakudi ,Thondi ,Dinakaran ,
× RELATED ஆவணம் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்ய கோரிக்கை