சென்னை : ஒருகால பூசை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் மகன், மகள்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவித்தொகை வழங்கினார். 500 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 என மொத்தம் ரூ.50லட்சம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் 10 மாணவர்களுக்கு காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.