×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது

பாடாலூர், அக். 3: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுபானகடை விடுமுறை டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு மதுபான கூடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்தது.

இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் சப் கலெக்டர் கோகுல் அரசு மதுபான கடை அருகே மதுபான விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். அப்போது காரை பிரிவு சாலை உள்ள அரசு மதுபான கடை அருகே சிலர் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களைவிற்பனை செய்வது தெரிய வந்தது. உடனடியாக அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இரூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் (40), குஞ்சான் மகன் வீராசாமி (65), சங்கர் மகன் ஜெயசீலன் (30) ஆகியோர்கள் அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தனர். பின்னர் பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gandhi Jayanti ,Padalur ,Tasmac ,Tasmac Liquor Shops ,Irur panchayat ,Aladhur taluka ,Perambalur district ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும்...