ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில், 155வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் நரேந்திர குமார், பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் பொறுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வினோ, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு, தூய்மை இந்தியா திட்ட பணியினை தொடங்கி வைத்தனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க கவுரவ தலைவர் மோகன்தாஸ், துணை தலைவர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், நூலகர், தணிக்கையாளர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், செயற்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: