×

தூய்மையே சேவையில் கல்லூரி மாணவர்கள்

கோவில்பட்டி, அக்.3: கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மரக்கன்றுகளை நட்டினர்.இந்தியா முழுவதும் செப்.17 முதல் அக்.2ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை பணியாளருக்கு மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் குருநாத், ரயில்வே பாதுகாப்புபடை சப் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டி, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜபிரியங்கா, ஜெயசிங் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் மாணவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை சேகரித்து, மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post தூய்மையே சேவையில் கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,S.S. Duraisamy Nadar Mariammal College ,India ,Swachhaye Sevail College ,
× RELATED கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்