×

வெள்ளாளங்குளம் விவேகானந்தா கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சுரண்டை,அக்.4: தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் சுரண்டை அருகேயுள்ள வெள்ளாளங்குளம் விவேகானந்தா கல்லூரியில் நடந்தது. இதில் விவேகானந்தா கல்வி குழும தலைவர் கல்யாணி சுந்தரம் தலைமை வகித்தார். சேர்ந்தமரம் வட்டார மருத்துவ அலுவலர் ப்ரோஸ்கான், விவேகானந்தா கல்லூரி நிர்வாக இயக்குனர் ஜெனிட்டா, முதல்வர் சுவாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் முருகன் வரவேற்றார். தொடர்ந்து மாணவர்கள் புகையிலையை தவிர்க்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் சேர்நதமரம் ஆரம்ப சுகாதார நிலைய பிசியோதெரபிஸ்ட் ரேணுகா, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, பாலசுந்தரம், ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வெள்ளாளங்குளம் விவேகானந்தா கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Velalangulam Vivekananda College ,Surandai ,Vellalangulam Vivekananda College ,Tamil Nadu Health Department ,District Tobacco Control Centre ,Vivekananda Education Group ,President ,Kalyani Sundaram ,Awareness ,Velalangalam Vivekananda College ,
× RELATED சேர்ந்தமரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்