நாகர்கோவில், அக்.4: நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்தவர் ஆஷா ஜெபகர். இவர் கடந்த மாதம் 18ம் தேதி குமரி எஸ்.பிக்கு மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில், ஆய்வாளர் தன்னை உதா சீனப்படுத்துவதாகவும், தனக்கு உரிய பணி வழங்குவதில்லை எனவும், இதனால் தனது பணியை சரிவர செய்ய முடியாத நிலையில் உள்ளதால் பணியை ராஜினாமா செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனை விசாரித்த எஸ்.பி சுந்தரவதனம், இன்ஸ் ெபக்டர் சாந்தி மற்றும் எஸ்.ஐ ஆஷா ெஜபகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தர விட்டார். இதன் பேரில் நேற்று முன்தினம் இருவரும் ஆயுதப்படை மைதானத்தில் பணியை ஏற்றனர். இது தொடர்பாக ஏடிஎஸ்பி மதியழகன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் ேபரில் அடுத்த கட்ட நடவடிக்ைக இருக்கும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதம் முறையானது அல்ல
ராஜினாமா கடிதம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ராஜினாமா செய்வதற்கு தகுந்த படிவங்களுடன் கூடிய கடிதம் உண்டு. அப்படி அனுப்பினால் மட்டுமே ராஜினாமாவாக கருத முடியும். சாதாரண மனு போல், ராஜினாமா கடிதம் அனுப்ப முடியாது. தவிரவும், நேற்று முன்தினம் இரவே எஸ்.பி உத்தரவின் படி, ஆயுதப்படை பணியில் எஸ்.ஐ ஆஷா ெஜபகர் மற்றும் சாந்தி ஆகியோர் சேர்ந்து விட்டதாக கூறினர்.
The post ராஜினாமா செய்ததாக கடிதம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்.பி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.