×

குளச்சல் 3 வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர்

குளச்சல், அக்.3: குளச்சல் நகராட்சி 3 வது வார்டு வலியவிளை பகுதியில் கடந்த சில நாட்களாக மின் அழுத்த குறைவு பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குளச்சல் மின் வாரிய அலுவலகம் சார்பில் அங்கு புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. டிராஸ்பார்மர் அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மின் வாரிய அலுவலக உதவி பொறியாளர் ராதாமணி, மின் பாதை ஆய்வாளர் மோகன், கவுன்சிலர் ரமேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குளச்சல் 3 வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Valiyavilai ,Kulachal Municipality 3rd Ward ,Kulachal 3rd Ward ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே கப்பல் மோதியதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கியது