×

வடசேரியில் காந்தி சிலைக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மரியாதை

நாகர்கோவில், அக். 3: மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வடசேரி காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்டச் செயலாளர் நாகராஜன் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் உசேன், சுப்பிரமணியம், டெல்பின், அந்தோணி, பெஞ்சமின், மனோகர ஜஸ்டஸ், மீனாட்சிசுந்தரம், அசீஸ், அஸ்லம், தாமோதரன், சுந்தர ராஜ், லெட்சுமி, லாரன்ஸ், பழனிச்சாமி, அருணாச்சலம், மணி, அந்தோணி, தாவூத், காலித், ராஜ் பிரவீன், சக்திவேல், ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வடசேரியில் காந்தி சிலைக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Minority People's Welfare Committee ,Gandhi ,Vadaseri ,Nagercoil ,Mahatma Gandhi ,Kanyakumari District Minority People's Welfare Committee ,Vadaseri Gandhi Park ,Dinakaran ,
× RELATED வடசேரி, மீனாட்சிபுரம் பஸ்...