×

திருவொற்றியூர் மண்டலத்தில் குப்பை மேடான பூங்காக்கள்: விளையாட்டு உபகரணங்கள் சேதம்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் இதன்பின்னர் அதிமுக அரசு, இந்த நீச்சல் குளத்தை பராமரிக்காததால் நாளடைவில் பயன்படாமலேயே போனது. தற்போது நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக நீச்சல் குளத்தின் உள்ளே ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கிறது. ‘‘நீச்சல் குளத்தை சென்னை மாநகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர் மண்டல அருகே சண்முகனார் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கு ஏணி பழுதடைந்து இரும்பு தகடுகள் உடைந்து நீட்டிக்கொண்டிருப்பதால் சிறுவர், சிறுமிகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திருவொற்றியூர் மண்டலத்தில் குப்பை மேடான பூங்காக்கள்: விளையாட்டு உபகரணங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Tiruvotiyur ,Chennai Tiruvotiyur ,Chief Minister ,Karunanidhi ,AIADMK government ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்...