அத்துடன் ஒன்றிய அரசு நீதிபதி சதீஷ் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதில், “ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? உச்ச நீதிமன்றம் கூறியது போல அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும்.ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை. நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது?.
நெய் சோதனையில் குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னை கிங்க்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு நிறுவனம்தான்.ஒன்றிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகளை ஏன் வெளியிடவில்லை?. ஒன்றிய அரசானது அந்நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும். பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் .உரிய அவகாசத்தில் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,” இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
The post சென்னை கிங்ஸ் ஆய்வகம் கொடுத்த அறிக்கையில் நெய்யில் கலப்படம் இல்லை என தகவல் : லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிபதி அதிரடி!! appeared first on Dinakaran.